ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை …. பொதுமக்கள் பீதி..!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 10ம் தேதி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஆண்டு ஜப்பானில் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது ஆனால் அதனை விட பயங்கரமான நிலநடுக்கம் ஜப்பானில், யமகட்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில்  ஏற்பட்டு உள்ளது.

Image result for ஜப்பான் சுனாமி

இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த அளவானது கடந்த நிலநடுக்கத்தை விட அதிகமாகும். . இதனை தொடர்ந்து ஜப்பான் அரசானது நிலநடுக்கம் தொடரும் அபாயம் இருப்பதாக உணர்ந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பேரிடர் மீட்புக்கு  தேவையான பணியாளர்கள் உதவி உபகரணங்கள் உள்ளிட்டவையும் தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து பேரிடர் மீட்பு பணிகளை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த எச்சரிக்கையால் ஜப்பான் வாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.