தூத்துக்குடி – மும்பை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கம்… பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!!

தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஒகாவுக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியல் அதிகரித்திருப்பதால் கோடைகால சிறப்புரைகள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க  வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது மும்பை – தூத்துக்குடி – மும்பை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது இந்த சிறப்பு ரயில் இன்று மதியம் 1:15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு நாளை இரவு 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது. இதனையடுத்து நாளை மறுநாள் காலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு 29-ஆம் தேதி மாலை 3:40 மணிக்கு மும்பையை சென்றடைகிறது. அதே போல் வருகிற 2-ம் தேதி மும்பையில் இருந்தும் 4-ம் தேதி தூத்துக்குடியில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி, படுக்கை வசதி மற்றும் பொது பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதைப்போல் தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, பாபநாசம், கும்பகோணம், திருச்சி, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, காஞ்சிபுரம், லோனவாலா போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்படுகிறது.

Leave a Reply