கோடை சீசன் ஆரம்பம்… சுற்றுலா பயணிகள் உற்சாகம்…!!

ஊட்டியில்  கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Image result for ஊட்டியில் சுற்றுலா பயணிகள்

தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்  குவிந்த வண்ணமாக உள்ளனர். ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.