கோடை விடுமுறை…மாணவர்கள் உற்சாகம்…!!

பிளஸ்-2விற்கான  அரசு பொதுத்தேர்வு கடந்த  மார்ச் 1-ஆம்  தேதி  தொடங்கி 19-ஆம்  தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து  பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம்  நிறைவு பெற்றது . இதையடுத்து  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில்  நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில்  இறுதி தேர்வை  முடிக்க பள்ளிக்கல்விதுறை  உத்தரவுவிட்டனர்.

Image result for கோடை விடுமுறை...மாணவர்கள் உற்சாகம்...!!

அந்த உத்தரவின்படி  1 முதல் 9 வகுப்பிற்கு நேற்றோடு  இறுதி தேர்வு  முடிவடைந்த நிலையில்,  பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும்  ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள்ளில் கோடை விடுமுறை முடிந்து  திறக்கப்பட இருப்பதாகவும் , ஜூன் 3-ந் தேதி பள்ளிகள்  திறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பாக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கதினை  பொறுத்து பள்ளிகளின் திறப்பு நாள்  தள்ளிப்போகலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.