கோடை விடுமுறை நாட்கள் அதிகரிப்பு மாணவர்கள் உற்சாகம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாள்கள் ஆனது அதிகரிக்கப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலானது நிர்ணயக்கப்பட்டுள்ளது பல தடைகளுக்குப் பின்பே தேர்தல் தேதி மாற்றப்படாமல் அதே தேதியில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது

இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கடைசி நாளாக ஏப்ரல் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை அலுவலகங்களுக்கும் மூன்றாம் பருவ தேர்வு ஏப்ரல் 12-ம் தேதிக்கு முன் முடிக்குமாறு பள்ளியின் கடைசி நாள் ஏப்ரல் 12 ஆக மாற்றும் மாறும் அதற்கு மேல் பள்ளிகள் நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம் ஆகிறது எந்த வருடமும் இல்லாத அதுபோல் இந்த வருடம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அதிகமாக விடப்பட்டு உள்ளது மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன இதனை தொடர்ந்து பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டங்களுக்கு புத்தகங்கள் அன்றே வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது கோடை விடுமுறை அதிகநாட்கள் விடப்பட்ட காரணத்தினால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்