விருந்திற்காக சென்ற தம்பதிகள்…. புதுப்பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ செங்கல்மேடு பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரது 2-வது பெண்ணான துர்காதேவிக்கும், அதேபகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவருக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் மறு வீட்டு விருந்திற்காக செங்கல்மேடு வந்துள்ளனர்.

அப்போது துர்காதேவி வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த துர்காதேவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்காதேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் துர்காதேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *