விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கரும்புகளில் காளைமாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகே 2 டன் கரும்பால் காளை மாடுகள் போன்ற உருவம் அமைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து வித்யாசமான முறையில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.
இதனையடுத்து பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் விவசாயத் தொழிலில் அழிந்து வரும் காளை மாடுகளின் பயன்பாட்டை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையிலும், விவசாயம் மற்றும் விவசாயிகளை சிறப்பிக்கும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக செந்தில்குமார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காளை மாடுகளின் சிறப்பையும் விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட இதனை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.