காடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்திய நாட்டின் 75 வது வருட சுதந்திர தினத்தை ஒட்டி காடுகள் மற்றும் புலிகள் பற்றிய முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாபெரும் பேரணி நடைபெற்றுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் சார்பில் சைக்கிள் மற்றும் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பாளையங்கோட்டையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் வைத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் மேற்கு புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் சிக்னல் வரை வனத்துறையினர் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *