அரசியலில் திடீர் திருப்பம்….கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்கு…!!

தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  பெருமான்மை இடங்களில்  வெற்றி பெற்றது.அதே போல்  பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன்  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி   மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர்.

Image result for tamilisai vs kanimozhi

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி மாபெரும் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  தற்போது கனிமொழியை எதிர்த்து பாஜக சார்பில்  போட்டியிட்ட   தமிழிசை சௌந்தர ராஜன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.இதில் திமுக  பரப்புரையில் ஆரத்தி எடுத்து வரவேற்றவர்களுக்கு பணம் அளித்ததாகவும்,கனிமொழி வேட்பு மனுவில் குறை இருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.கனிமொழி மக்களவையில் உறுப்பினராக இருந்தும் வரும் நிலையில் இவ்வழக்கு பரப்பை ஏற்படுத்தியுள்ளது.