ரயில் தண்டவாளத்தில் திடீர் பள்ளம்… திக்..திக்..நிமிடத்தில் சரி செய்த ஊழியர்கள்… குவியும் பாராட்டு…!!

திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன.

Image result for தண்டவாளத்தில் பள்ளம்

இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து ஊழியர்களை கொண்டு ஜல்லி கற்களை கொட்டி ரயில் பாதைகள் சரி செய்யப்பட்டன. முன்னதாக அவ்வழியாக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வந்த பயணிகள் ரெயில் சுமார் 20 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மெதுவாக அவ்வழியாக இயக்கப்பட்டது. தற்பொழுது தண்டவாளம் முழுவதுமாக சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல்  அளித்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.