திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

 திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .