திடீரென தீப்பிடித்த விமானம்..ரஷ்யாவில் சோகம் !! 41 பயணிகள் உயிரிழப்பு …

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்து  41 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ  விமான நிலையதிலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு,ஏரோபிளோட் விமானம்  பயணிகளுடன் நேற்று மாலை கிளம்பியது. திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட உடனடியாக விமானத்தை தரையிறக்க  விமானி முயன்றார்.

fire in plane russia க்கான பட முடிவு

ஆனால்  விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால்  41 பேர்  உயிரிழந்தனர் .மேலும்  இந்த விமானத்தில் 73 பயணிகளுடன்  5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.