“பாலத்தில் செல்லும் வாகனங்கள் மறையும் அதிசயம்” குழப்பத்தில் நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ..!!

மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும்  ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Image result for This Viral Video Of Traffic Mysteriously Disappearing Leaves Internet Scratching Their Heads

அந்தவகையில் தற்போது  ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’  மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் டேனியல் என்ற நபர் பகிர்ந்துள்ளார். அதில்,  ஒரு நதியின் மேலுள்ள மேம் பாலத்தின் வழியாக இடதுபுறம் ஒவ்வொரு வாகனங்களாக சென்று திடீரென மாயமாகி விடுகின்றன.

Related image

இந்த வீடியோவானது பெரும்பாலோரிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது  63,000 முறை பார்க்கப்பட்ட நிலையில், இதனை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.  இதற்கு விடை கிடைப்பதற்காக  தங்களுக்கு  தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்த வீடியோவை நன்றாக உற்று நோக்கி கவனித்தால் உண்மை புரியும். வீடியோவில் பாலம் போன்று இருப்பது பாலமே அல்ல. அது ஒரு சாலை. நதி போன்று தெரிவது நதியே கிடையாது. அது ஒரு மொட்டை மாடி மொட்டை மாடியில் இருந்து ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தான் மாயையை உருவாக்குகிறது. சிலர் உற்று நோக்கி மாயையை புரிந்து கொள்கின்றனர்.. ஒரு சிலர் தெரியாமல் தங்களது நண்பர்களுகடன் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *