போட்டியின்போது பாகிஸ்தான் நடுவர் திடீர் மரணம்…!

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது மாரடைப்பு காரணமாக நடுவர் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த56, கசாப் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பின் கிரிக்கெட் மீதிருந்த அதீத ஆர்வத்தினால் தேர்வுகள் எழுதி நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதய நோயாளியான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று கராச்சியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் நடுவராக இருந்தபோது இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இவரது உயிர் பிறிந்துவிட்டதாக அப்போட்டியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நடுவர் ஹிலேல் அவாஸ்கரும் இதேபோல் போட்டியின்போது திடீரென உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *