“தற்கொலைக்கான அறிகுறி…. காரணம்…. தடுக்கும் முறை…. சிகிச்சைமுறை” 1 உயிரை காப்பாற்ற தேவையான முழுவிபரமும் உள்ளே….!!

இந்தியாவில் 15 வயதிலிருந்து 39 வயது வரையில் உள்ளவர்கள் மரணம் அடைவதற்கான முக்கிய காரணமாக தற்கொலை இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 10.5% பேர் என்ற அளவில் தற்கொலை விகிதம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்து பேசுவது அல்லது அதற்கான முயற்சிகளையே தற்கொலை நடத்தை என்கிறோம். இத்தகைய தற்கொலை எண்ணங்கள் மற்றும் நடத்தை உளவியல் ரீதியான அவசர நிலையாக கருதப்படவேண்டும். இது ஒரு எதிர்மறை விஷயம் போல் தோன்றினாலும், இதை பேச வேண்டியது மிக அவசியம். 

தற்கொலைக்கான அறிகுறிகள் :

 ஒருவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதோ எப்படி உணர்கிறார் என்பதோ நமக்குத் தெரிவதில்லை. அதனால் தான் தற்கொலை எண்ணம் கொண்ட எவரையும்  நம்மால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை. எனினும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் வெளிப்படுத்தும் சில எச்சரிக்கைகளை நாம் கவனிக்க முடியும். அவை,

  • அதிக நேரம் தூங்குவது அல்லது குறைவாக தூங்குவது.
  • மற்றவர்களுடன் பேசுவதை தவிர்ப்பது.
  • அடிக்கடி மாறும் மன நிலையில் இருப்பது.
  • மரணத்தைப் பற்றி பேசுதல் மற்றும் எழுதுதல்
  • மன உந்துதல் அல்லது கவனக்குறைவான நடத்தை
  • மது அல்லது போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துவது.
  • நம்பிக்கையற்ற  நிலை அல்லது தனிமையில் இருப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துதல்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் பேசுவது எப்படி ?

தற்கொலை அறிகுறிகள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரோ அல்லது நண்பரோ தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார் என்பதை உங்களுக்கு காட்டிவிடும். மேற்கொண்டு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அது பற்றிய உங்களின் கவலைகளை பற்றி அவரிடம் கூறுங்கள் அந்த உரையாடலில் பின்வரும் விஷயங்கள் தவறாமல் இருத்தல் நல்லது.

  •  அமைதியாக நம்பிக்கையை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கும் வகையில் நாம் பேசவேண்டும்.
  • அவர்களின் உணர்வுகள் நியாயமானவை, உண்மையானவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
  • உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் உனக்கு எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்ற வார்த்தையை கூறி அளிக்க வேண்டும்.

தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும் காரணங்கள் எவை?

 ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு எடுக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மனநலப் பிரச்சனை முதல் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஒருவருக்கு தற்கொலை எண்ணத்தை தூண்ட காரணமாக இருக்கின்றன. தற்கொலைக்கு தூண்டும் மனநல பிரச்சனைகள் மன சோர்வு தான் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர இருதுருவ மனநிலை மனச்சிதைவு நோய் கவலைகள் ஆளுமை பிரச்சனைகள் உள்ளிட்டவைகளும் காரணமாக இருக்கின்றன.

தற்கொலை முடிவில்  இருக்கக்கூடியவர்களுக்கு உதவக்கூடிய சிகிச்சை முறைகள் எவை

 பேச்சு சிகிச்சை:

 இம்முறை உளவியல் சிகிச்சை என்று சொல்லப்படும் சிகிச்சை முறை தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையை குறைக்க உதவுகின்றது.

மருந்துகள் சிகிச்சை:

தற்கொலை ஆபத்தை குறைக்க பேச்சு சிகிச்சையால் போதிய பலன் ஏற்படவில்லை எனில், அறிகுறிகள் குறைக்க மருந்துகள் அளிக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். தற்கொலை எண்ணங்களை குறைக்கவும் நீக்கவும் இது உதவும்.

வாழ்வியல் முறை மாற்றங்கள்:

பேச்சு மற்றும் மருந்துகள் சிகிச்சைகளுடன் வாழ்வியல் முறை மாற்றங்களும் சேரும்போது தற்கொலை எண்ணம் நீங்கும். குறிப்பாக சில ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்ற தொடங்கினால் தற்கொலை எண்ணம் மறைய தொடங்கி விடும். அதில்,

 தினசரி உடற்பயிற்சி,

 நல்ல தூக்கம்

 மது உள்ளிட்ட தீய பழக்கங்களை நிறுத்துதல். உள்ளிட்ட பழக்கங்களை மேற்கொள்ளுதல் நல்லது.

 இறுதியாக:

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தற்கொலை எண்ணம் இருந்தாலும் அல்லது உங்களுக்கு அந்த எண்ணம் இருந்தாலும் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டு என்பது நினைவிருக்க வேண்டும். தற்கொலை எப்போதும் தீர்வாகாது. ஆகவே எப்போதும் அமைதியாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் நினைத்தால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும். உங்கள் துன்பங்களையும் மகிழ்ச்சியையும் பேசி விடுங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *