“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

Image result for MODI

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில், இந்திய அணியின் கடைசி வரை போராட்டம் சிறந்தது.ஆனால் போட்டியின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் , பந்து வீச்சு என சிறப்பாக இருந்ததை  பெருமையாக கருதுகின்றோம். வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. என்று பிரதமர் மோடி ட்வீட் செய்து இந்திய அணியை வாழ்த்தி உள்ளார்.