சென்னையில் சுபஸ்ரீ பலியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது.
இதில் லாரியின் முன் டயர் அவர் மீது ஏறி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையிஅனுமதிக்கப்பட்டு சில நிமிடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது பதற வைக்கும் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
It is very clear from this CCTV footage#WhoKilledShubashree https://t.co/dFAKemz9F0
— Vetrivelan (@vetrivelan172) September 13, 2019