“புத்தாண்டு கொண்டாட்டம்” வைரலான வாலிபரின் சாகச வீடியோ…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும் மீறி கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றார். மேலும் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரம் அந்தரத்தில் இருக்கும்படி தூக்கியபடி சாகசம் செய்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அறிந்த போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததோடு கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வாலிபர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயனை கைது செய்ததோடு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *