பிரம்மிக்க வைக்கும் “எஃப்.டி.ஆர் 1200 எஸ் பைக் ” … இந்தியாவில் விற்பனைக்கு ரெடி ..!!

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் .

Image result for indian fdr1200 s

இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பையும், அதற்கான விலையையும் 2018ம் ஆண்டே அறிவித்திருந்தது. மேலும் இந்தியன் மோட்டார் டீலர்ஷிப்களில் 2 லட்சம் டோக்கன் அட்வான்ஸ் செலுத்தி ஏற்கனவே புக்கிங் செய்து கொள்ள ஆரம்பித்து விட்டனர் .

Image result for indian fdr1200 s

குறிப்பாக இந்தியன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்  வெற்றி பெற்ற எஃப்டிஆர் 750 பிளாட் டிராக் ரேஸ் வாகனத்தை போல உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் , எஃப்டிஆர் சிரீஸ்கள் புதிய லிக்யுட் கூல்டு 1,203cc V-டூவின் இன்ஜின்களுடன் 120 bhp மற்றும் 112.5 Nm பீக் டார்க் கொண்டு உள்ளது . இதுமட்டுமின்றி, இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related image

மேலும் , எஃப்டிஆர் 1200 எஸ் பைக்குகளில் பிரிமியம் வசதிகளாக, போஸ் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்களுடன் 6-ஆக்சிஸ் இண்டீரியல் சென்சார்களுடன் லீன் சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ்களுடன் உள்ளது. இதுமட்டுமின்றி இவை ஸ்போர்ஸ், ஸ்டாண்டர்ட் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளுடன், 4.3 இன்ச் முழு கலர் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் கன்சோல்களை கொண்டுள்ளது .

Image result for indian fdr1200 s

இந்த இன்ஜின்கள் ஸ்கவுட் வாகன இன்ஜின்களாக கவரபட்டது என்றாலும், இதில் 80 விழுக்காடு புதிய உபகரணங்களுடன் அதிக அழுத்தம் கொண்டவாறு பொருத்தப்பட்டுள்ளது. இதன் முதல் தயாரிப்பு வெர்சன் இந்தியன் மோட்டார் சைக்கிள்களாகளாகவும் , குரூசர்களுடனும் இருப்பதால் , ஹெவிவெயிட் இந்தியன் மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடும் போது லேசானதாக இருக்கும்.

Related image

மேலும் இந்தியன் நிறுவனம், எஃப்டிஆர் 1200 வகை பைக்களை இந்தியாவின் CBU ரூட் வழியாக மற்ற இந்தியன் மாடல்களை போன்று உருவாக்கியுள்ளது . இந்த  எஃப்டிஆர் 1200 பைக்குகள் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மோட்டார் சைக்கிள்களாக இருக்கும். இந்நிலையில், அட்வென்சர் டூரிங் மாடல்கள் 2021ம் ஆண்டு மாடல்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.