ரயில்வேயில் வடமாநிலத்தவர் : ”அதிர்ச்சி அளிக்கிறது” திமுக MP திருச்சி சிவா வேதனை…!!

ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.தமிழகத்தில் ரயில்வே துறை குரூப் D தேர்வு ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும் எழுதுவது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது என்பதை காட்டுகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.