எந்த விலங்கினம் கொரோனாவை கட்டுப்படுத்தும்..? 500 ரத்த மாதிரிகள் சேகரிப்பு… பிரபல நாட்டில் ஆய்வு..!!

எந்த விலங்கினத்தில் உள்ள ஆண்டிபாடி நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ? என்ற ஆய்வினை துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது.

துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் கொரோனா வைரஸை விலங்குகளின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் எதிர்த்துப் போராடுமா ? என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மான், சிங்கம், ஒட்டகம், புலி, பூனை, குதிரை, ஆடு, நாய் உள்ளிட்ட 18 வகையான விலங்கினங்களுடைய 500 ரத்த மாதிரிகள் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸை எதிர்த்து எந்த விலங்கினுடைய ஆண்டிபாடி போராடுகிறது ? அல்லது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துகிறது ? என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 14 நாட்களில் ஆண்டிபாடி சோதனைகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எந்த விலங்குகளின் நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுகிறது என்பது தெரியவரும். இந்த சோதனையில் ஏதாவது ஒரு விலங்குடைய ஆண்டிபாடி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தினால் அதை மனிதர்களுடைய உடலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து பொருளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம் என்று துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் உல்ரிச் வார்னெரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *