“விடிய விடிய மாணவர்கள் போராட்டம்” குருச்சேத்திர பல்கலைக்கழகத்தில் பரபரப்பு…!!

குருச்சேத்திர பல்கலைக்கழக  மாணவர்கள் இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானா மாநிலத்தின் இருக்கும் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ளது குருச்சேத்திர பல்கலைக்கழகம். இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழகம் நிர்வாகம் மாணவர்களை அழைத்து பேசவில்லை . இதையடுத்து மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியவாறு இரவு உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

sfi protest க்கான பட முடிவு

கோரிக்கைகளுக்கான முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு அங்குள்ள மாணவர் சங்கம் தலைமை தங்கியது. மாணவர்களும் , மாணவிகளும் இரவு சாப்பிடாமல் தொடர் போராட்டத்தில் இருப்பதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.