மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டு செருப்புக்கு பதில்  ஷூ வழங்கப்படுமேற்று அறிவித்துள்ளார்.  இவரின் இந்த இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.