“பள்ளி செல்லும் மாணவர்கள்” பேருந்தில் செய்த அட்டகாசம்…. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 10 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பேருந்துகளில் 75% பயணிகள் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டையிலிருந்து வந்த அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லறை நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது திடீரென மேற்கூரையில் ஏறி அமர்ந்து கோஷமிட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் பேருந்துகளில் படியில் பயணம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களின் இத்தகைய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *