ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் 16 வயதான மாணவர் ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனந்தபூர் நாராயணா கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தனது செருப்பை வகுப்பறையில் கழற்றிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினார். அதன்பின் திடீரென அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான வீடியோ வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் குதித்ததும் வகுப்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என்ன நடந்தது என்று வெளியே சென்று பார்க்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.