கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Image result for food poison in government school

இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.