“மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்திய நபர்” அதன் பின் நடந்த சம்பவம்…. கைது செய்த போலீஸ்….!!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி வசித்து வருகின்றார். இவரது பெற்றோர் வேலை காரணமாக வெளியே சென்று விட்டனர். எனவே மாணவி மட்டும் தனது வீட்டில் தனியாக படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணி என்ற வாலிபர் வந்தார். பின்னர் அவர் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *