15-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை…சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன்  வாடகைக்கு அரை ஒன்றை  எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து அங்கு சென்ற மறைமலைநகர் காவல்துறையினர்  சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Image result for எஸ் ஆர் எம் கல்லூரியில்

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,அவர் தங்கியிருந்த அறையில் சோதனையிட்டனர். அப்பொழுது அல்லம் அண்ட் தட்டு என எழுதி ஸ்ரீ ராகவ் கையொப்பமிட்ட கடிதத்தை கைப்பற்றியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.அந்த வார்த்தைக்கான அர்த்தம் குறித்தும்,  இதற்கும் தற்கொலை முடிவிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரு மாதத்திற்குள்ளாக அந்த கல்லூரியில்  மூன்றாவதாக நடைபெற்ற  தற்கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.