முகம் கழுவ சென்ற மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே கைப்பந்து உள்ளிட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை மற்றும் பரிசுகள் வென்றுள்ளார். இவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு விட்டு முகம் கழுவுவதற்காக அருகிலுள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவானந்தத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பாநாடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *