ரயிலில் அடிபட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் நவாஸ் கரீம் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் தன்சிகா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரயில் நிலையம் அருகே காலைக்கடன் கழிப்பதற்காக தன்சிகா தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்பாடியிலிருந்து வந்த ரயில் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தன்சிகா அடிபட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தன்சிகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.