12-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிறுகன்னூர் பகுதியில் மின் வாரிய ஊழியரான சுந்தரமூர்த்தி வசித்து வருகின்றார். இவரது 2-வது மகன் நித்தீஷ் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தீஷ் தனது அறைக்கு படிக்க சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் நித்திஷ் வெளியே வராத காரணத்தினால் அச்சமடைந்த பெற்றோர் கதவை திறந்து உள்ளே பார்த்துள்ளனர்.
அப்போது நித்திஷ் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இண்டூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.