சீனாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 6.8-ஆக ரிக்டரில் பதிவு…!!!

சீனாவில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் சிச்சுவான் என்னும் நகரில் இன்று திடீரென்று பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பதறிய மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தார்கள். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

மேலும் இந்த நிலநடுக்கமானது 6.8 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.