குடுநீர் வழங்க வேண்டி திடீரென சாலைமறியல்…!!

மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர்   . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட மக்களின்   பகுதியை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து  புறக்கணிப்பதாகவும், உடனே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த  நகராட்சி அதிகாரி மற்றும் மணப்பாறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினர். அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையில்  அவர்களின்  கோரிக்கைக்கு ஏற்று  தண்ணீர்  கிடைக்க அணைத்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால்  பொதுமக்கள் அனைவரும்  சாலைமறியலில் இருந்து கலைந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.