“பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை” மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் சட்டத் தொகுப்பினை கைவிடுதல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில வேலை நிறுத்தம் காரணமாக செங்கல்பட்டு பணிமனையிலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் மிகவும் குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் தனியார் தொழில் சங்க ஊழியர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர், போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசையும் மோடியையும் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் துறையினர் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *