கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை… கலெக்டர் எச்சரிக்கை…!!!!!

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் மற்றும் டாஸ்மாக், மாவட்ட  மேலாளர் போன்றோரை  கொண்டு நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, காவல் துறை, சுகாதார துறை, வனத்துறை, டாஸ்மாக் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் கலெக்டர் உமா கூறியதாவது, கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் போலி மது பாட்டில்கள்  மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இந்த பணியில் மேற்கொண்டு முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக் உட்படுத்தப்படும். போலி மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பல அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  கட்டுப்பாட்டில் செயல்படும் 8838352334 என்ற  செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply