தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் விவசாயியான சிம்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. இதனால் சிம்மராஜன் வெளியே வந்து பார்த்தபோது தெரு நாய்கள் கடித்து குதறி 6 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சில ஆடுகள் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.