கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார்.

அந்த மர்ம நபரை போலீசார் தேடிவந்த நிலையில்  கூடலூரில் உள்ள ஒரு வீட்டில் காஸ் சிலிண்டரை திருட முயன்ற நபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசிடம்  ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றதும் அவரே என்று விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.