வித்தியாசமான வீட்டு வேலை…. 1 மணி நேரத்திற்கு…. சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

வீட்டுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகின்றது.

பெருநகரங்களில், கணவன் – மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு “தி நேக்கட் கிளன்ஸிங்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை நிக்கி பெல்டோன் – லியன் வுல்மேன் தம்பதிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் என்ன வித்தியாசம் என்றால், வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வேலை செய்யும் சமயத்தில்  மேலாடை இல்லாமலோ அல்லது நிர்வாணமாகவோ தான் வேலை செய்ய வேண்டுமாம். இதை கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆம் இந்நாடுகளில் இது போன்ற நிறுவனங்களுக்கு சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை. எனவே அவர்கள் தைரியமாக நடத்துகின்றனர். வித்தியாசமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே இந்நிறுவனத்தினர் இதை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனத்திற்கு துபாயில் பயங்கர வரவேற்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்நாட்டில் இதை சட்டப்பூர்வமாக நடத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்களாம். அங்கு நடத்த அனுமதி கிடைத்தால் துபாயிலும் இந்த நிறுவனம் செயல்படும் என அந்நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த நிறுவனம் இந்த லாக்டவுண் காலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் பலரும் ஊரடங்கிற்கு பிறகு இந்த நிறுவனத்தில் பதிவு செய்து வீட்டு வேலையாட்களை வரவழைத்துள்ளனர். அனால் இந்நிறுவனத்தின் சேவை குறித்து சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதம் நடந்துள்ளது. இருப்பினும் இந்நிறுவனம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் சேவையில் எந்த மாற்றமும் செய்யாமல் நடத்தி வருகின்றனர்.

மேலாடை இல்லாமல் வீட்டு வேலைசெய்யும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்தில் ரூ.6,700 மற்றும் நிர்வாணமாக வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.8,500 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருந்தாலும். இந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகள் பல எழுந்துள்ளன.