இளம் வீரர் பராக் ஆட்டத்தை பார்த்து புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித்.!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பராக் ஆட்டத்தை  புகழ்ந்து பேசியுள்ளார் 

ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 சிக்ஸர், 7 பவுண்டரி) விளாசினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது.

Imageஇதையடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள்  ரஹானே 34 (21) ரன்களும், சாம்சன் 22 (15) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அப்போது ராஜஸ்தான் 6 விக்கெட் இழந்து 15.2 ஓவரில்  123 ரன்கள் எடுத்து இருந்தது.  இதையடுத்து ரியான் பராக்குடன் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து கடைசியில் அதிரடி காட்டி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Image

கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி  ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் 4,6 என அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இறுதியில் 19.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பராக் 31 பந்துகள் 47 ரன்களும்  (2 சிக்ஸர், 5 பவுண்டரி), ஜோப்ரா ஆர்ச்சர் 12 பந்துகள் 27* ரன்களும் எடுத்தனர்.

Image

இந்நிலையில் வெற்றி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேசினார். அப்போது அவர் பேசும் போது, “இளம் வீரரான  ரியான் பராக் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அனுபவமுள்ள வீரர்களிடம் இருந்து  கற்றுக் கொண்ட சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். மேலும் அவர் பந்து வீசுவதிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார் என்று அவர் கூறினார். ராஜஸ்தான் அணி 11 போட்டிகள் விளையாடி  4 வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.