“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலவர் பிரதிநிதிகளாக இடம்பெற்றனர்.

நாராயணசாமி க்கான பட முடிவு

இந்நிலையில்  கடந்த 15_ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நிதி ஆயோக் ஆட்சி குழு கூட்டம் நடைபெற்றது. மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் , கேரளம் , கர்நாடகம் என பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் குறித்து இன்று புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி  கூறுகையில் ,  புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் , புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.