அரசின் அலட்சியம்… இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?…. முக ஸ்டாலின் கண்டனம்..!!

அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.

Image result for சுபஸ்ரீ

இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக இறந்தார். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Image result for mk stalin angry

இந்நிலையில் சுபஶ்ரீ மறைவுக்கு முக ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று ஆதங்கத்துடனும் வேதனையுடனும் பதிவிட்டுள்ளார்.