அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு தோல்வி பயம்…. நயினார் நாகேந்திரன் பேட்டி…!!

அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் ஸ்டாலின் விமர்சித்து வருகின்றார் என்று இராமநாதபுர வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் . 

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சி இடம்பெற்றுள்ள பிஜேபி_க்கு 5 நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Image result for நயினார் நாகேந்திரன்

இராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் நயினார் நாகேந்திரன் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவிடம் நயினார் நாகேந்திரன் தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டனர் . இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, நயினார் நாகேந்திரன், கூறுகையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது எனவே தான் அதிமுக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார் என்று தெரிவித்தார்.