“நீட் எதிர்ப்பு மசோதா நிராகரிப்பு” ஸ்டாலின் கண்டனம் …!!

தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  ஆனால்  தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

Image result for mk stalin

இந்நிலையில் இதை கண்டித்து திமுக தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான முக.ஸ்டாலின் தனது ட்வீட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் , விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டதாக செப்’ 2017 கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்த செய்தியை 21 மாதங்களாக மறைத்திருக்கிறது அதிமுக அரசு. தாமதத்தால் மசோதாக்களை மீண்டும் அனுப்பும் வாய்ப்பையும் இழந்திருக்கிறோம். இந்தப் பச்சை துரோகத்துக்கு யார் பொறுப்பு? என்று பதிவிட்டுள்ளார்.