”பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்” ஸ்டாலின் கோரிக்கை …!!

நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Image

அதற்குரிய நஷ்டஈடு வழங்கவேண்டும். இந்த மழையின் காரணத்தால் ஆறு பேர்  உயிரிழந்துள்ளனர். அந்த குடும்பத்திற்கு உரிய நிதி வழங்குவது மட்டுமல்லாமல்,  குடும்பத்திற்கு ஒருவருக்காவது அரசு வேலையை உருவாக்கித் தர வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய சாலைகளில் நீர் ஓடுவதற்கான சிமெண்ட் தளங்கள் அமைத்து விட வேண்டும் . அதேபோல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட்டு விட்டு அவர்கள் வீடுகளில் இருக்கக்கூடிய தண்ணீர் முழுமையாக வடிகின்ற  வரையில் அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image

மேலும் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு , தேவைப்படுகின்ற பொருட்களை அரசு வழங்கிட வேண்டும்.இந்த அரசைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்து இருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலை வந்து இருக்காது. எனவே இனிமேலும் இதுபோன்ற மொத்தமாக இல்லாமல் அரசு இயந்திரத்தை துரிதப்படுத்தி வேகமாக  பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று தெரிவித்தார்.