”அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்வு” ஸ்டாலின் குற்றச்சாட்டு …!!

பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்  2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு  வந்ததில் இருந்து  3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Image result for stalin edappadi

எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பாலினால் மக்களுடைய வயிற்றில் அடிக்கின்ற  நிலை ஏற்படுகிறது. இதை கேட்டால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் விலையை உயர்த்தியுள்ளோம் வேற வழியில்லை என்று பெருமையாக பேசுவார்.பால் உற்பத்தியாளர்களுக்கும் ,  மக்களுக்கும் ஒரு பிளவை  ஏற்படுத்தி  சண்டையை உண்டாக்கும் முயற்சியை ஏற்படுத்து கின்றனர்.