வேலூர் வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி …!!

வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து வாக்காளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து திமுக தலைவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளீட்டுள்ளார். அதில் , பொதுத் தேர்தலோடு நடைபெற்று நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தனியாக நடைபெற்ற தேர்தல் என்பதால் அதிமுக ஆட்சியாளர்கள் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு அதிகார மீறல் களுடன் ஆட்டம் போட்டனர். எதிர்க் கட்சியான திமுக தனது தொண்டர் பட்டாளத்தையும் தோழமை கட்சிகளின் பலத்தையும் பொது மக்களின் பேராதரவை நம்பி களம் இறங்கியது.

மக்களை தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து குழந்தை ஏமாற்றுவது போல வாக்காளர்களை ஏமாற்றி விட்டனர் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி இழிவு செய்த முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் விஷம பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. ஆளுங்கட்சியின் அதிகாரத்தையும் பணபலத்தையும் மீறி வேலூர் கோட்டையை திமுகவின் வெற்றிக் கோட்டையாகி இருக்கிறது.இந்தியா எதிர்பார்த்த இந்த தொகுதியில் முடிவு திமுகவிற்கு சாதகமாக இருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை  நிலைநிறுத்தி,  அதற்கான எண்ணிக்கையும் பெருகி இருக்கிறது.

Image

இந்த மாபெரும் வெற்றியை காலமெல்லாம் நம்மை வளர்த்தெடுக்கும் வழியை காட்டி நம் நெஞ்சில் வாழும் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கிய ஜனநாயக வழியில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்று எடுக்கும் மகத்தான பணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் வெற்றியை சாத்தியமாகி கொடுத்த வேலூர் வாக்காளருக்கும் , நிர்வாகிக்கும் , தோழமை கட்சி தலைவர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் தலைவணங்கி நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.