ஸ்டாலின் திருட்டுதனமாக பிரேசில் சென்றார்…. அதிமுக அமைச்சர் குற்றசாட்டு..!!

ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர்  வெளிநாடு செல்வதில் மர்மம்  உள்ளது என்று விமர்சனம் செய்தார்.

Image result for stalin vs jayakumar

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதில், ஸ்டாலின் தான் சில மாதங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக பிரேசில் சென்றார். அங்கு சென்று அவர் என்ன செய்தார்? என்ன வாங்கினார்? என்பது யாருக்கும் தெரியாது என்றும், பலர் அவர் அங்கு சென்று அங்கேயும் சொத்து குவித்ததாக கூறுகிறார்கள்.

Image result for stalin vs jayakumar

இதையெல்லாம் செய்ய ஸ்டாலின் எந்த அரசிடம் அனுமதி வாங்கினார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்றே முதலீடுகளை ஈட்டுவதற்காக வெளிநாடுகள் சென்றுள்ளாரே தவிர, திருட்டுத்தனமாக செல்லவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.