“ஏமாந்து போன ஸ்டாலின் “அமைச்சர் காமராஜ் கிண்டல் ..!!

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் .

கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு தேவையான எம்எல்ஏ எண்ணிக்கை அவரிடம் இல்லை. இது குறித்து அமைச்சர் காமராஜ் ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார் .அவர் கூறியுள்ளதாவது, முதலமைச்சராக வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் வீணாகிப்போனது,ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த  ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ,துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும்  இடையில் பிளவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் அவை உண்மையில்லை என்றும் ,இருவரும் ஒன்றாக கைகோர்த்து முன்பைவிட அதிமுகவில் நன்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும்  அவர் பதிலளித்துள்ளார்.