சொன்னபடி செய்தால்…. “முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்” ஸ்டாலின் அசத்தல் பேச்சு.!!

மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வர் பழனி சாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மகன்  திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Image result for ஸ்டாலின்

இவ்விழாவின் போது பேசிய  முக ஸ்டாலின், பொறுத்தார் பூமி ஆள்வார், நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் முதல்வர் பழனி சாமி கூறிய படி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்றும்  தெரிவித்தார்.