“ஜனநாயக முறைப்படி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம்” முக ஸ்டாலின்..!!

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து  பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.    

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் 92 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால்  மோடியே மீண்டும் பிரதமராவார் என்பது உறுதியாகி விட்டது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for stalin dmk

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு உலக  தலைவர்கள்  மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, ஜனநாயக முறைப்படி மோடி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.